நுண்கடன் திட்டத்தால் மட்டக்களப்பில் மீண்டும் ஒரு ஏழை தாய் தற்கொலை!

மட்டக்களப்பில் மற்றுமொரு தற்கொலை சம்பவம் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்திற்கு உட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் தற்கயாகேஸ்வவர் ஆலயத்திற்கு அண்மித்த வீதியில் கணபதிப்பிள்ளை விஜயலெட்சுமி (46 வயது) என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரவு வேளையில் தூக்கிட்டமையால் இன்று 2017.10.22 காலை வேளையயிலேயே இனம் காணப்பட்டு காத்தான்குடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. திடிர் மரணவிசாரணை அதிகாரி கணேஸ்தாஸ் தலைமையில் மேலதிக விசாரணை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆறு பிள்ளைகளின் தாயான இவர் நுண்கடன் வழங்கல் பிரச்சினை காரணமாக இறந்திருக்கலாம் என்று பொதுமக்கள் விசாரணையின் மூலம் கூறுவது குறிப்பிடத் தக்கது.

தற்போது பெருகி வரும் கவர்ச்சி மிகு நுண்கடன் திட்டங்களின் மூலம் ஏழை மக்கள் பாரமுகமாக சிக்குண்டு தற்கொலை செய்துகொள்ளும் வீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

மாதம், கிழமை, நாள் எனப் படிப்பறிவு குறைந்த பாமர மக்கள் குறைந்த பணத்தினை கடனாகப் பெற்று கூடிய வட்டியினை செலுத்தவேண்டி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழை மக்களே குறிப்பாக குடும்பப் பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர
மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ்
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட

About இலக்கியன்

மறுமொழி இடவும்