பொத்துவில் கோர விபத்து மூவர் படுகாயம்!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில்,மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி,பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடனும் மோட்டார் சைக்கிளுடனும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மூவர் பலத்த காயங்களுக்குடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று இரவு(24) அனுமதிக்கப்பட்டுள்ளதாக,போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,அறுகம்பையில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பாதையின் முன்னாள்,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடனும் மோட்டார் சைக்கிளுடனும் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் எதிரே தரித்திருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரும் விபத்துக்கியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர், மார்பின் பலத்த காயங்களுடன் கால் உடைந்து கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைக்காக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீளவும் மேலதிக தீவிர சிகிச்சைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் குடிபோதையில் இருந்தாக மருத்துவ சான்றிதழ் தெரிவிப்பதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியாவில் கணவரை பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார் என முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மஹறம்பைக்குளம் பகுதியில் கடந்த 7
நடக்கவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் தனி நாட்டையோ தனி ஈழத்தையோ பெற்றுத்தரப் போவதில்லை. இது கிராமங்களிற்கான தேர்தல் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான
துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*