சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய மாமனாா் கைது

16 வயதுடைய தனது மருமகளுக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்த மாமானாரை இன்று காலை மொறவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில் மருமகளை அழைத்துச் சென்று தனது வீட்டில் இரவு தூங்க வைத்து ஆபாச வீடியோக்களைக் காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

அதே இடத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவதது,

குறித்த சிறுமி அம்மம்மாவின் வீட்டில் இருந்த போது சிறார்கள் இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவ்வீட்டுக்கு வருகை தந்த மாமனார், சண்டை பிடிக்க வேண்டாம் தாயார் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்கின்றேன் என கூறி மாலை 5 மணியளவில் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

பின்னா் இரவு முழுவதும் ஆபாச வீடியோக்களைக் காண்பித்து, காலை 5 மணியளவில் தயார் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்த நேரத்தில் எங்கிருந்து வருகின்றாய் எனத் தாயார் வினவியபோது, இரவு நடந்த சம்பவங்களைச் சிறுமி கூறியதாகவும் அதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரியவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்