நாம் முன்பு தெரிவித்ததையே ஜ.நா அறிக்கையாளர் தெரிவித்துள்ளார் – சுமந்திரன்

இலங்­கைக்கு நேரில் வந்து பார்­வை­யிட்ட பின்­னர் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ டி கிரிவ் வெளி­யிட்ட அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வர­வேற்­றுள்­ளது.

இலங்கை அரசு பொறுப்­புக் கூறல் விட­யங்­களை உள்­நாட்­டில் முன்­னெ­டுக்­கத் தவ­றி­னால் அது வெளி­நா­டு­க­ளில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தாம் முன்­னரே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார் என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

‘‘இதே சாரப்­பட்ட ஐ.நா. அறிக்­கை­யா­ளர் பப்­லோ வெளி­யிட்ட அறிக்­கையை நாம் வர­வேற்­கின்­றோம்’’ என்­றார் அவர்.

இலங்கை அரசு உள்­நாட்­டில் பொறுப்­புக்­கூ­றல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கத் தவ­றி­னால் வெளி­நாட்­டில் அது முன்­னெ­டுக்­கப்­ப­டக்­கூ­டும் என்று ஐ.நா. அறிக் கை­யா­ளர் தனது இலங்­கைப் பய­ணத்­தின் முடி­வில் கொழும்­பில் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்ன என்று கேட்­ட­போதே சுமந்­தி­ரன் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஐ.நா. அறிக்­கை­யா­ளர் கூறி­யதை நாம் வர­வேற்­கின்­றோம். நாம் இதே விட­யத்தை முன்­னரே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தோம். பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் கால­தா­ம­தம் ஏற்­பட்­டுள்­ளது.

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர், 100 நாள்­கள் வேலைத் திட்­டத்தை அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. அதில் நிறை­வேற்­றப்­ப­டும் என்று கூறப்­பட்ட விட­யங்­கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று ஐ.நா. அறிக்­கை­யா­ளர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பொறுப்­புக் கூறல் விட­யங்­களை அரசு செய்­யத் தவ­றி­னால் உலக நியா­யா­திக்­கத்தை அர­சால் தவிர்க்க முடி­யாது. வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டும் – என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்