கட்டலோனிய அரசை கலைப்பதற்கு எதிர்ப்பு

தனக்கு உட்­பட்ட கட்­ட­லோ­னிய அர­சைக் கலைத்­து­விட்டு மீண்­டும் தேர்­தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்­மிட்­டுள்ள நிலை­யில், இந்த முடி­வுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து கட்­ட­லோ­னி­யா­வில் மிகப்­பெ­ரும் பேர­ணி­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

ஸ்பெய்­னின் வரு­வாய், முத­லீடு, சனத்­தொகை, சுற்­று­லாப் பய­ணி­க­ளின் வருகை என்று அத்­தனை விட­யங்­க­ளி­லும் கட்­ட­லோ­னி­யா­வின் பங்கு மிக­வும் உச்­சம்.

தனது செல்­வங்­களை ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு ஸ்பெய்ன் அரசு கொடுக்­கி­றது என்று காலா­கா­ல­மாக குற்­றஞ்­சாட்டி வரு­கி­றது கட்­ட­லோ­னியா. இத­னால் கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக அங்கு தனி­நாட்­டுக் கோரிக்­கை­க­ளும் வலுப்­பெற்­றுள்­ளன.

இது தொடர்­பான வாக்­கெ­டுப்­பை­யும் கடந்த மாதம் முத­லாம் திகதி கட்­ட­லோ­னியா நடத்­தி­யது. பதி­வான 2.3 மில்­லி­யன் வாக்­கு­க­ளில் 90 சத­வீ­த­மா­னவை பிரி­வ­தற்கு ஆத­ர­வாக அமைந்­தன.

இந்­தத் தேர்­தலை நடத்­தி­ய­மைக்­காக கட்­ட­லோ­னிய அரசை வன்­மை­யா­கக் கண்­டித்­தது ஸ்பெய்ன். தற்­போது கட்­ட­லோ­னிய அர­சைக் கலைத்­து­விட்டு மீண்­டும் தேர்­தலை நடத்த ஸ்பெய்ன் திட்­ட­மிட் டுள்­ளது என்று தக­வல்­கள் வந்­துள்­ளன.

இதற்கு கட்­ட­லோ­னிய மாகாண தலை­வர் பூஜ்­டி­ய­மன்ட் கடும் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஸ்பெய்ன் அர­சுக்கு எதி­ராக அவர் கடும் கருத்­துக்­க­ளை­யும் முன்­வைத்­தி­ருந்­தார். இந்த நிலை­யில் கட்­ட­லோ­னிய மக்­க­க­ளும் பெரு­ம­ள­வில் திரண்டு தமது எதிர்ப்­பைப் பதி­வு­செய்­துள்­ள­னர்.

நேற்­று­முன்­தி­னம் நடத்­தப்­பட்ட இந்­தப் பேர­ணி­யில் சுமார் 2 லட்­சம் மக்­கள் பங்­கேற்­ற­னர் என்று பன்­னாட்டு ஊட­ கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

தொடர்டர்புடைய செய்திகள்
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானிய ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சி படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 43
ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார், அவரை மன நல சிகிச்சைக்கு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*