அம்பாறை மாவட்டம், காரைத்தீவு பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
காரைத்தீவு-07 ஆம் பிரிவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும் சடலம் தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் சம்பாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் 40 வயது நிரம்பிய பெண்ணொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்ற கோணத்தில் மேலதிக புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

