போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 25 ராணுவ அதிகாரிகளை கைதுசெய்ய உத்தரவு – சிங்கள ஊடகம் தகவல்

போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த 25 இராணுவ அதிகாரிகளும் வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்யுமாறு முன்னாள் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சுகா சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் போலி அறிக்கை சமர்ப்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வருகைத்தந்திருந்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் கருத்தின் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகுின்றது.

30 ஐரோப்பிய நாடுகள் சர்வதேச உலக பேரவையில் கையொப்பமிட்டுள்ளது. அது ரோம பேரவைக்கு வெளியே உள்ள சட்டமாகும்.

இவ்வாறு போர் குற்றம் சுமத்தப்பட்டுள் 25 இராணுவத்தினரில் 6 பேர் மேஜர் ஜெனரல்களாகும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்