முல்லைத்தீவில் ஈழ தமிழரின் பாரீய மனித புதைகுழி :சீமான்

இலங்கையின் யுத்தகளமான, முல்லைத்தீவு கோதாபய கடற்படை முகாம் அமைந்துள்ள இடத்தில், பாரிய மனிதப் புதைகுழி இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

குறித்த முகாம் அமைந்துள்ள காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள், தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், இது குறித்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, சீமான் மேற்கண்டவாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோதாபய காணி சுவீகரிப்பின் பின்புலத்தில், ஏதேனும் மர்மங்கள் இருக்கக்கூடும். அப் பகுதியில் மக்களின் உடல்கள் புதைத்துவைக்கப்பட்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

மக்களிடம் காணிகளை ஒப்படைத்தால், அவர்கள் தமது தேவைக்காக நிலத்தை தோண்டும் போது, மண்ணின் அடியில் இருந்து எழும்புகள், மண்டை ஓடுகள் மற்றும் ஏனைய மனித உடல் எச்சங்கள் வெளிவரக்கூடும் என்றே இலங்கை அரசு, அதை மக்களிடம் கையளிக்காமல், படையினர் சுவீகரிக்க இடமளிப்பதாக, சீமான் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்