யாழ்.பல்கலையில் இரண்டாவது நாளாக இன்றும் கதவடைப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கதவடைப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

யாழ்.பல்கலையில் இரண்டாவது நாளாக இன்றும் கதவடைப்பு போராட்டம்!

Posted by Eeladhesam Tv on Dienstag, 31. Oktober 2017

அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு வழக்குகளை மாற்றியமைக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிறீலங்கா ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரை தீர்வு வழங்கப்படாத காரணத்தினால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி கதவடைப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ்த் தலைமைகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு இன்றைய தினம் யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

மாணவர்களின் கதவடைப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி சிறீலங்கா ஜனாதிபதிக்கு பல்கலைக்கழக துணைவேந்தரை கடிதம் அனுப்புமாறும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் பல்கலைக்கழக துணைவேந்தர் அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்