சம்பந்தன் மீது சிவசக்தி ஆனந்தன் சபாநாயகரிடம் முறைப்பாடு!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பததை தனக்கு வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதிர்கட்சித்தலைவர் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்த போது அதற்கான சந்தர்ப்பத்தை சம்பந்தன் வழங்க மறுத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது ஒரு மக்கள் பிரதிநிதி தான் சார்ந்த மக்களின் கருத்தை நாடாளுமன்றில் தெரிவிப்பதற்கான சிறப்புரிமையை சம்பந்தன் பறித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில் இதுவிடயம் தொடர்பாக தான் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் முறைப்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்த அவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கான நேரத்தை சபாநாயகரிடம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர் என வன்னி பாராளுமன்ற
வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிங்கள குடியேற்றங்கள் காரணமாக உள்ளுராட்சி சபைக்கு ஐந்து சிங்கள பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக்

About இலக்கியன்

மறுமொழி இடவும்