மாவீரர் நாள் அரசியல் களமல்ல – சிவகரன்

அரசியல் களமாக மாவீரரையோ துயிலுமில்லத்தையோ எவரும் பயன்படுத்த கூடாது என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதென, தெரிவித்துள்ள அவர் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்தே, மாவீரர் செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இக்குழு,கடந்த சனிக்கிழமை 28ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எந்த அரசியல் கட்சியினரையும் மாவீரர் தின செயற்பாட்டுக்குழுவில் உள்ளீர்ப்பதில்லை எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கிளிநொச்சியினில் தமிழரசுக்கட்சியினர் மாவீரர் தினத்தை முன்னெடுக்க குழுவொன்றை அமைத்துள்ளமை கடுமையான விவாதத்தை தோற்றுவித்துள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டினில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு திட்டமிட்டவகையினில் தமிழரசுக்கட்சிக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள பின்னடைவினை போக்க மேற்கொள்ளப்படும் மலினமான அரசியல் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்