கூட்டணி தொடர்பில் பொறுத்திருந்தே முடிவெடுக்கப்படும் -த.தே.ம.முன்னணி!

வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு சி.வி.விக்கினேஸ்வரன் போன்றவர்களே பொருத்தமானவர்களென தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்.

இலங்கை தமிழரசுக்கட்சியினில் அடுத்த முதலமைச்சர் கதிரைக்கான சண்மை உச்சம் பெற்றுள்ள நிலையினில் இதனை தெரிவித்துள்ள அவர் வடமாகாணசபை ஒரளவிற்கேனும் செயற்பட சி.வி.விக்கினேஸ்வரன் போன்றவர்களே காரணமெனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் சிந்தித்தே முடிவெடுப்போம். அந்தவகையில், கொள்கை அடிப்படையில் ஒன்றிப்போக கூடியவர்களுடன் தான் கூட்டு சேருவோம். அவர்களுடன் தான், தமிழ்த் தேசிய அரசியலைச் சரியாகக் கொண்டு செல்வோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் யுத்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்து கொண்டு, நான், பத்மினி சிதம்பரநாதன் உள்ளடங்கலாக, நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடினோம். அந்த நற்பெயரை வைத்து, சம்பந்தன் இன்று உள்ளார்.

“இந்தியாவுக்குத் தேவையற்றவையை நான் பேச மாட்டேன் என சம்பந்தன் சொன்ன பிறகே வெளியேறினோம். இப்போது மீண்டும் நாம் கூட்டுச் சேர்ந்த பின்னர், எம்முடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் பேரம்பேச்சுக்கு விலை போனால், மீண்டும் பிளவு ஏற்படும். அப்போதும் நாமே மோசமானவர்களாக வீதியில் நிற்போம். மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதனால் கூட்டுச் சேர்வது தொடர்பில் சிந்தித்தே முடிவெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்