யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு அமைச்சர் அனந்தி சசிதரன் ஆதரவு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப் போட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப் போட்டு போராடிவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்!

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்