மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு விடுக்கப்பட் அழைப்பை அக்கட்சித் தலைமை நிராகரித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுடனான நாளை (03) சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, அக் கட்சி சார்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்றையதினம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடி இது பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்