யாழ். சின்னக்கடையின் இறைச்சி விற்பனைக் கடைகள் முஸ்லிம் வர்த்தருக்கு வழங்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் உள்ள சின்னக்கடை இறைச்சிக்கடைத் தொகுதியை யாழ். மாநகர சபை முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு ஏலத்தில் கொடுத்துள்ளது. இதனால் அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் உள்ளுர் தமிழ் வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, அங்கு கடந்த 30 வருடங்களாக சீமைப்பன்றி இறைச்சி விற்பனை செய்த தமிழ் வியாபாரி ஒருவரை மேற்படி குத்தகைக்கு எடுத்த முஸ்லிம், பன்றி இறைச்சி விற்க வேண்டாம் எனத் தடை செய்துள்ளார்.

பன்றி இறைச்சி உண்பது தமது முஸ்லிம் மதக் கொள்கைக்கு விரோதமானது என்பதாலேயே அதை அவர் தடை செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெய்வேந்திரராஜா லக்ஸ்மன் என்பவர், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனது வாழ்வாதாரத் தொழிலை தொடர்ந்தும் செய்வதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரியே அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

அவரது கடிதம் வருமாறு,

தெய்வேந்திரராஜா லக்ஸ்மன்
432/2 மடம் வீதி யாழ்ப்பாணம்
01.11.2017.

கௌரவ C.V. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடக்கு மாகாணசபை

யாழ் சின்னக்கடை பொதுச் சந்தையில் பண்றி இறைச்சி
விற்பனை செய்வது தொடர்பானது

தெய்வேந்திரராஜா லக்ஸ்மன் ஆகிய நான் யாழ் மாநகர சபை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகரிடம் அனுமதி பெற்று பொதுச் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் உள்ளுரில் இறைச்சிக்காக வழர்க்கப்படும் சீமைப் பன்;றிகளை பலவருடங்களாக இறைச்சியாக்கி விற்பனை செய்து வருகின்றேன்.

இதனை எமது பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அதிகமாக தமது இறைச்சித் தேவைக்காக கொள்வனவு செய்து வருகின்றனர்.

தற்போது பண்றி இறைச்சியை சின்னக்கடை சந்தை வளாகத்தில் விற்பனை செய்வதற்கு தற்போது சந்தையைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்தவர் பன்றி இறைச்சி விற்பனை செய்வது தமது மதத்திற்கு எதிரானது என்று கூறி நான் பண்றி இறைச்சி விற்பதற்கு தடைவிதித்துள்ளார்.

யாழ் மநகர சபையில் நான் குத்தகைக்கு எடுத்த இறைச்சிக் கடையை திரும்பவும் ஒப்படைக்குமாறு வற்புறுத்தி கடையை மீழப் பெற்றதோடு கடைக்கு நான் செலுத்திய குத்தகைப் பணத்தையும் என்னிடம் மீளவும் தொடுத்து விட்டனர்.

நான் இது தொடர்பாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் அவர்களிடம் சென்று கதைத்தபோது சின்னக் கடையில் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தையும் ஒரு முஸ்லீம் வியாபாரி குத்தகைக்கு எடுத்ததால் அவர் அவ்விடத்தில் பண்றி இறைச்சிக் கடை இருப்பது அவர்கள் மதத்திற்கு எதிரானது என்பதால் அவ்விடத்தில் பண்றி இறைச்சிக் கடை இருப்பதை அவர் விரும்பவில்லை.

அதனால் அவ்விடத்தில் பண்றி இறைச்சிக் கடை நடத்துவதற்கு உமக்கு கடைதர முடியாது என்றும் நீர் பண்றி .இறைச்சிக் கடை நடத்துவது தொடர்பாக எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் இது தொடர்பாக நீர் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சென்று முறையிடுமாறு யாழ் மநகரசபை ஆணையாளர் என்னிடம் சொன்னார்.

அப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் இப்பண்றி இறைச்சியையே தமது பிரதான இறைச்சித் தேவைக்காக கொள்வனவு செய்கின்றார்கள் மத நம்பிக்கை என்று பார்த்தால் மாடு வெட்டுவது இந்து மதத்திற்கு எதிரானது இதை யாரும் தடைசெய்ய முன்வரவில்லை.

மத நம்பிக்கையை காரணம் காட்டி 30 வருடங்களாக நடத்திவரும் பண்றி இறைச்சிக்க் கடையை தடைசெய்வது எனது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது எனவே எனது பன்றி இறைச்சிக் கடையை அவ் இடத்தில் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி
இப்படிக்கு
தாங்கள் உன்மையுள்ள
தெ. லக்ஸ்மன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்