வவுனியா சித்தி விநாயகர் ஆலய சிலைகள் விசமிகள் உடைத்து சேதம்!

செட்டிகுளம், முகத்தான் குளம் சித்திவிநாயகர் ஆலய நவக்கிரங்கள் விசமிகளால் உடைத்து வெளியே எறியப்பட்டுள்ளதுடன் சில சிலைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் அண்மையில் கும்பாவிசேகம் செய்யப்பட்ட சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் இருந்த நவக்கிரகங்கள் உடைத்து விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் சிலைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

ஆலய சிலைகள் உடைத்து வீசப்பட்டுள்ளது. காலை ஆலயத்திற்கு சென்றவர்கள் ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்