எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்!

நல்லாட்சி அரசாங்கம் எந்த வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் யோன்சன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குறித்த போராட்ட களத்திற்கு சென்று நேற்று (01) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில்…

அனுராதாபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக எந்தவித நிபந்தனைகளுமின்றி இந்த நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினராக நாம் வடகிழக்குப் பகுதிகளில் அனைத்து மாணவர்கள், இளைஞர்கள்,யுவதிகள், அனைத்து பொது அமைப்புக்களையும் ஒன்று திரட்டி பாரியதொரு மக்கள் போராட்டமாக குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நடாத்த உள்ளோம் என உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஜோன்சன் கருத்துத் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்