அரியாலை துப்பாக்கிச்சூடு: சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் படைத்துறையினர் மீது சந்தேகம் வலுத்திருந்த நிலையில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் கடந்தவாரம் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை நேற்று முந்தினம் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று பரிசோதகர் ஒருவரும், உப பரிசோதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்