மாணவர்கள் போராட்டத்துக்கு யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் ஆதரவு

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்துச் செல்லும் போராட்­டத்­திற்கு உத­வி­யையும் ஆத­ர­வையும் வழங்க வேண்­டிய பெரும் ­பொ­றுப்பு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பொது அமைப்­புகள் அர­சியல் கட்­சிகள் மற்றும் கல்­விசார் சமூ­கத்­தினர் மற்றும் அனை­வ­ருக்கும் நிச்­சயம் உண்டு. என யாழ்ப்­பாணப் பல்­கலைக்கழக ஊழியர் சங்கம் -தெரி­வித்­துள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லை­கோரி யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்து வந்த போராட்­டத்தின் கார­ண­மாக பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் மாண­வர்­களை கல்விச் செயற்­பா­டு­க­ளுக்கு தடை விதித்­த­துடன் விடு­தி­க­ளில் ­இ­ருந்தும் வெளியே­று­மாறு உத்­த­ர­விட்­டது. இது தொடர்பில் பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்கம் தமது ஆத­ர­வினைத் தெரி­வித்து ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள செய்­திக்­ கு­றிப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை மீண்டும் தமிழ் பிர­தேச நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்ற வேண்டும் என்ற உட­னடிக் கோரிக்­கை­யையும், அவ்­வாறு மாற்­றப்­பட்­டதன் பின்பு, தமது வழக்­கு­களைத் துரி­த­மாக விசா­ரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் முன்­வைத்து, அநு­ரா­த­புரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியற் கைதிகள் மூவரின் கோரிக்­கை­களை இழுத்­த­டிப்­பின்றி உட­ன­டி­யாக நிறை­வேற்ற வலி­யு­றுத்­திய கோரிக்­கை­யா­னது யாழி­லுள்ள பொது ­அ­மைப்­புகள், அர­சியல் கட்­சிகள், மற்றும் மக்கள் அமைப்­பு­களால் விடுக்­கப்­பட்­டது. இவர்­க­ளுடன் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் இணைந்து கொண்­டார்கள்.

தற்­போது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்துச் செல்லும் போது அவர்­க­ளுக்கு உத­வி­யையும் ஆத­ர­வையும் வழங்க வேண்­டிய பெரும் ­பொ­றுப்பு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பொது அமைப்­புகள் அர­சியல் கட்­சிகள் மற்றும் கல்­விசார் சமூ­கத்­தினர் மற்றும் அனை­வ­ருக்கும் நிச்­சயம் உண்டு.

எனவே மாண­வர்­க­ளோடு நாமும் இணைந்து போரா­ட­ வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு இணைந்து போரா­டா­விட்­டாலும் குறைந்­த­பட்சம் போராடும் மாண­வர்­க­ளி­னது நலன்­களைப் பேணும் நட­வ­டிக்­கை­க­ளி­லா­வது ஈடு­படல் அவ­சியம். அதனை விடுத்து மாண­வர்­க­ளிற்கு அநா­வ­சி­ய­மான அச்­சு­றுத்­தல்­க­ளையோ இடைஞ்­சல்­க­ளையோ ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளக்­ கூ­டாது.

மாண­வர்­களின் போராட்டம், அவர்­க­ளது கோரிக்கை நியாயம் என ஏற்­றுக்­கொண்டால் அதனை ஆத­ரிக்க வேண்டும் மாறாக எவ­ரா­வது அல்­லது எந்த அமைப்­பு­க­ளா­வது அவர்­க­ளது கோரிக்­கையோ, போராட்­டமோ நியா­ய­மற்­றது என்றோ அர­சியல் கைதி­களின் விட­யத்தில் தாங்கள் மாறான நிலைப்­பாட்டை கொண்­டி­ருப்­ப­தாக கரு­தி­னாலோ அவர்கள் தங்­க­ளது நிலைப்­பாட்டை தெளி­வாக வெளிப்­ப­டை­யாக வெளிப்­ப­டுத்­துதல் வேண்டும். எவரும் ஒரு­போதும் இரட்டை நிலைப்­பாட்டை கடைப்­பி­டிக்க முடி­யாது.

அந்­த­ வ­கையில் பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்­க­மா­னது ஏற்­க­னவே பொது ­அ­மைப்­பு­க­ளுடன் இணைந்து இப்­போ­ராட்­டத்­திற்கு அழைப்பு விடுத்­த­வர்கள், போராடியவர்கள் என்ற அடிப்படையிலும் பல்கலைக்கழக சமூகத்தின் ஓர் அங்கம் என்ற வகையிலும் மாணவர்களின் போராட்டம், அவர்களது கோரிக்கை நியாயம் என ஏற்றுக்கொண்டு அவர்களின் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அவர்களுடன் கரம் கோர்க்கின்றோம். இதுவே பல்க-லைக்கழக ஊழியர் சங்கத்தின் நிலைப்-பா-டும் -என குறிப்பிடப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்