கூட்டமைப்பின் கதை முடிகிறதா? வடகிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டி!

அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் வடகிழக்கினில் முதல் தடவையாக எம்.ஏ.சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கூட்டமைப்பு தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.இந்நிலையினில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழரசுக்கட்சி சார்பினில் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது ஆதரவு ஊடகங்களது பிரதிநிதிகளை அழைத்து செய்தியாளர் சந்திப்பு என்ற பேரினில் கூட்டங்களினை நடத்துவது சுமந்திரனின் அண்மைய போக்காகும்.

அவ்வாறு நடத்தப்பட்ட கூட்டதிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தலில் தனது விருப்பப்படியான பட்டியல் படியே வேட்பாளர்கள் களமிறக்கப்படுவரென தெரிவித்;துள்ள சுமந்திரன் அதற்கு உடன்படாத கட்சிகள் வெளியேறலாமென தெரிவித்துள்ளார்.

அந்தவகையினில் யாழ்ப்பாணத்திலும் மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் பங்காளிக்கட்சிகளிற்கு இடமில்லையென சுமந்திரன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.மன்னாரினில் இரண்டு உள்ளுராட்சி சபைகளை டெலோவிற்கு தரமுடியுமென தெரிவித்துள்ள நிலையினில் செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாணத்திலும் ஒரு உள்ளுராட்சி சபையினை கேட்டு தொங்கிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே புளொட் சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தினில் சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பிரதேசசபைகளினை தனக்கு கட்டாயம் தரவேண்டுமென தொங்கிக்கொண்டிருக்கின்ற போதும் அதற்கு சுமந்திரன் உடன்படவில்லையென தெரியவருகின்றது.
இதனிடையே ஈபிஆர்எல்எவ் தனித்து போட்டியிடும் முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையினில் தமிழரசு தனித்து போட்டியிடும் வகையினில் காய்களை நகர்த்திவருவதாக தெரியவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்