வாளு­டன் கைதான இளை­ஞ­னுக்கு ஒரு­மாதம் சிறை

வாளு­டன் கைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்று ஒரு மாத கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­தது.யாழ்ப்­பா­ணம் நக­ரப்­ப­கு­தி­யி­லுள்ள தனி­யார் நிறு­வ­ன­மொன்­றின் விற்­பனை முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்­றும் இளை­ஞன் ஒரு­வ­னுக்கே இந்­தத் தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

கோண்­டா­வில் பகு­தியைச் சேர்ந்த இளை­ஞன் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னர் கோப்­பாய் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தார். பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இந்த வழக்கு நேற்­று­வி­சா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது தடை­செய்­யப்­பட்ட ஆயு­த­மான வாளை உடைமை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டை இளை­ஞன் ஏற்­றுக் கொண்­டார். அத­னைத் தொடர்ந்து நீதி­வான் சி. சதீஸ்­த­ரன் இளை­ஞ­னுக்கு ஒரு மாத கடூ­ழி­யச் சிறைத்­தண்­டனை விதித்­தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்