தமிழரசுக் கட்சியுடன் இனி எந்த தொடர்பும் இல்லை – அதிரடி காட்டும் சுரேஸ்

இனிவருங்காலங்களினில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென்ற பேச்சிற்கே இடமில்லையென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி தலைவர் க.சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினிலிருந்து வெளியேறுவதாக அர்த்தப்படமாட்டாது.
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது பற்றியே நாம் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியேற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.இனிமேலும் தமிழ் மக்களது ஆணையினை புறந்தள்ளி செயற்படும் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது எமது மக்களது ஆணைக்கு எதிராக இழைக்கும் துரோகமிழைக்க நாம் தயாரில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தினில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் அவர் தெரிவிக்கையினில தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி இடையினில் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் தெரியாதிருந்தால் அவற்றினை கேட்டறிந்து கருத்து தெரிவிப்பது நல்லதென எம்.ஏ.சுமந்திரனிற்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

கூட்டமைப்பிற்கு உரிமை கோருவதற்கு எம்.ஏ.சுமந்திரனிற்கு உரித்தில்லையென்பதை முதலில் தெரிந்திருக்கவேண்டுமென கூறிய சுரேஸ்; பிறேமச்சந்திரன் கூட்டமைப்பின் உருவாக்கத்தினில் பெரும் பங்கை விடுதலைப்புலிகளே ஆற்றியிருந்தார்கள் என தெரிவித்த அவர் கூட்டமைப்பின் பெயரையும் அவர்களே தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை இயக்கம்,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பவையே இருந்தன.எனினும் சில முரண்பாடுகளால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பவை வெளியேறின.

இந்நிலையினில் இடையினில் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்பவை வந்து இணைந்து கொண்டன.
அவ்வகையினில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி, மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் என்பவை மட்டுமே ஆரம்பித்திலிருந்து கூட்டமைப்பினிலிருந்தமையினை இடையினில் அரசியலுக்கு வந்த கற்றுக்குட்டிகள் புரிந்துகொள்ளவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலை தனது கட்சி நிலைப்பாட்டுடன் ஒத்த நிலைப்பாட்டினை கொண்ட தரப்புடன் இணைந்து எதிர்கொள்ள தயாராக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்