நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கடும் கண்டனம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை இடைநிறுத்தக் கோருவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றிரவு குழுவொன்று புறப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன் ஆகியோருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.

அதன்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் அடுத்தவாரம் அரச தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, அழைப்பை புறந்தள்ளி சந்திப்புக்கு வராத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்