வித்தியா கொலை வழக்கு: மாவையிடம் வாக்குமூலம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(சனிக்கிழமை) வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிரான வழக்கு தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மாவிட்டபுரத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றின் செய்தியாளரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. அவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தொடர்பாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை
ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை

About காண்டீபன்

மறுமொழி இடவும்