கூட்டமைப்புடனான சந்திப்பை புறக்கனித்த ஈ.பி.ஆர்.எல்.எப் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பை, சுரேஸ் பிரேமசந்திரனின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) புறக்கணித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ். மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (சனிக்கிழமை) கூடின. அதில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி மாத்திரம் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈ.பி.ஆர்.எல்.எப்., கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கமையவே இன்றைய சந்திப்பை ஈ.பி.ஆர்.எல்.எப்., புறக்கணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் கலந்துகொண்டிருந்தன.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து
இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்

About சாதுரியன்

மறுமொழி இடவும்