வலி. வடக்­கில் நாளை பேரணி

வலி­கா­மம் வடக்­குப் பிர­தேச சபைக்­குட்­பட்ட வயா­வி­ளான் மற்­றும் பலாலி தெற்கு மக்­க­ளின் மீள்­கு­டி­யேற்­றத்தை வலி­யு­றுத்தி நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை அமை­திப் பேர­ணி­யொன்று முன்­னெ­டுக்கப்ப­டவுள்­ளது.

‘எமது மக்­கள் அனு­ப­விக்­கும் துன்­பங்­கள், துய­ரங்­களை வெளிக்­கொ­ணர எமது மண் எமக்­கா­னது என்ற ஒற்­றைக் கோரிக்­கையை முன்­வைத்து மக்­களை ஒருங்­கி­ணைத்து இந்­தப் பேரணி நடத்­தப்­ப­ட­வுள்­ளது’ என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

வசா­வி­ளான் கிராம முன்­னேற்­றச் சங்க முன்றிலி­லி­ருந்து ஆரம்­பிக்­கும் அமை­திப் பேரணி வயா­வி­ளான் இரா­ணு­வக் குடி­யி­ருப்பு நுழை­வா­யிலை சென்­ற­டை­யும். அங்கு வைத்து யாழ்ப்­பா­ணக் கட்­ட­ளைத் தள­ப­திக்­கான மனுக் கைய­ளிக்­கப்­ப­டும்.

அரச தலை­வ­ருக்கு முக­வ­ரி­யி­டப் பட்ட கடி­தத்­தின் பிர­தியே கட்­ட­ளைத் தள­ப­திக்கு அங்கு கைய­ளிக்­கப்­ப­டும். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர், வலி.வடக்­குப் பிர­தேச செய­லர் ஆகி­யோ­ருக்­கும் இதன் பிர­தி­கள் நேரில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்