ஈபிஆர்எல்எவ் பிரிந்துசெல்வதால் எமக்கு பாதிப்பு இல்லை – சிவிகே

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “இந்த முடிவை எடுத்தமைக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் அது அவருக்காகத் தான்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், மக்களின் ஆணையை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதை கூற வேண்டும்.

அவர் கூட்டணியிலிருந்து விலகிச் செல்ல விரும்புவது பரிதாபமாக உள்ளது, இதனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால், ஆனால் நிச்சயமாக தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை.

அவர் உறவுகளை முறித்துக் கொள்வதால், எமது கட்சிக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.

கடந்த காலங்களில், நாம் இத்தகைய பிளவுகளை சந்தித்துள்ளோம். எனினும், இன்னமும், நாங்கள் வலுவடைந்திருக்கிறோம்.

அரசியலமைப்பு யோசனை திருப்தியானது என்று கூறமாட்டேன். தற்போதைய அரசியலமைப்புடன் ஒப்பிடும் போது, இடைக்கால அறிக்கையில் உள்ள சில விடயங்கள், முன்னேற்றகரமானவை. முன்னேற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்