சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் விபத்து!

சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் 10ஆம் வட்டாரப்பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆடை தொழில்சாலைக்கு பெண்களை ஏற்றிசென்ற பேரூந்து எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு விலத்தி வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பேரூந்தில் சென்ற பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்