தமிழரசுக்கட்சியின் பினாமியாகிறதா டெலோ?

தமிழ் தேசிய கூட்டமைப்பினில் தமிழரசுக்கட்சியின் பினாமியாக டெலோ செயற்படத்தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பங்காளிக்கட்சிகளிற்கிடையிலான சமரச முயற்சியொன்றை நேற்றைய தினம் மன்னார் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் முயற்சியால் நடந்திருந்தது.
கூட்டமைப்பில் தன்னிச்சையாக செயற்பட்டு ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கட்சிகள், பொதுஅமைப்புக்கள், கிறீஸ்தவ மதத்தலைவர்கள்; கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.இதற்கு பதிலளிக்க முடியாது மாவையும் கூடிச்சென்ற சீ.வி.கே.சிவஞானமும் திக்குமுக்காடிப்போயிருந்துள்ளனர்.
கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு தமிழரசுக்கட்சிதான் இடையூறாக இருக்கிறதென சிவசக்தி ஆனந்தன் கடுமையாக குற்றம் சுமத்தினார். கூட்டமைப்பை பதிவு செய்யாமையில் தொடங்கி பாராளுமன்றத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்கு பேச சந்தர்ப்பம் வழங்காமை வரை கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

மதத்தலைவர்கள் கூட்டமைப்பின் நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளதென பகிரங்கமாக கூறியது அங்கு சென்றிருந்த அனைவரிற்கும் அதிர்ச்சியிகை கொடுத்திருந்தது.

உண்மையினை போட்டுடைத்த மதத்தலைவர்கள் பாராட்டை பெற்றிருந்தனர்.
இந்நிலையினில் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்து கிளம்பியபோது, பொதுஅமைப்புக்கள் சார்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னாள் ஆயர் இராயப்பு யோசெப் கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கை செய்ததை நினைவூட்டினார்.அப்பொழுது யாப்பு ஒன்றை உருவாக்கவும் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களின் பிரசன்னத்துடன் முடிவெடுக்கப்பட்டு, மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டதை நினைவூட்டினார். அந்த குழுவில் தானும் இருந்ததாகவும், அந்த யாப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

இந்நிலையினில் குறிக்க டெலோ சிறீகாந்தா கூட்டமைப்பாக பதிவுசெய்ய சம்மதிக்காமலிருப்பது தமிழரசுக்கட்சியின் உரிமை. அதில் யாரும் தலையீடு செய்ய முடியாதென தமிழரசுக்கட்சிக்கு முண்டுகொடுக்க முன்வந்தார். அவரது பேச்சால் ஆயரும் ஏனையவர்களும் கடும் சீற்றமடைந்திருந்தனர்.

இதனிடையேசிறீகாந்தாவின் நடவடிக்கைகள் கூட்டமைப்பை பதிவுசெய்ய இடையூறாக இருக்கிறது. தமிழரசுக்கட்சியின் பின்னணியிலேயே அவர் பேசியதாக சந்திக்கிறோம். செல்வம் அடைக்கலநாதனை நேரில் அழைத்து, தமது அதிருப்தியை ஆயர் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆயர் இல்ல குரல்தரவல்ல பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்