தமிழீழத்தை கேட்போம் என்றா உரையைாற்ற சந்தர்ப்பம் தரவில்லை? சிவசக்தி ஆனந்தன்!

தமிழீழத்தை கேட்போம் என கருதியா, நாடாளுமன்றத்தில் உரையைாற்ற எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் தமக்கு வாய்ப்புத் தரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக அண்மைக்காலமாக அவதூறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக மாவை சேனாதிராஜாவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான நிலைப்பாடுகளை தெளிவுபடுத்திக்கொள்ளும் வகையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் இந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்திருந்ததுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள நான்கு பங்காளிக் கட்சிகள் மற்றும் மன்னார் மாறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் தலைமையிலான பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற சம்பந்தன் அனுமதி மறுத்தமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன், தமிழீழத்தையா கேட்கப் போகின்றோம் என வினவியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட வேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக நிறுத்தி அனைவரும் ஒன்றுமையாக செயற்பட்டால் தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக மாற்றலாம் என ரொலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக் –கட்சிக்கு எதிராக மாத்திரம் அண்மைக்காலமாக பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுவதாக மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்