‘உச்சக்கட்ட ஜனநாயகம் உள்ள கட்சி தமிழரசுக்கட்சிதானாம்’- சிறிதரன் எம். பி

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உச்சக்கட்ட ஜனநாயகம் உள்ள கட்சியாக தமிழரசுக்கட்சி காணப்படுகின்றது என யாழ் மாவட்ட பாராளுமன்று உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத:து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய கூட்டத்தில் அரசியல் யாப்பு தொடர்பான விடயங்கள் பரிமாறப்பட்டடிருந்தது. இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது. இதன் பிரகாரம் வர இருக்கின்ற இறுதி வரைபில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

ஆகவே இடைக்கால வரைபை வைத்து மக்களை குழப்பாமல் அரசியல் யாப்பிற்கான முழுமையான வடிவம் வந்ததன் பின்னரேதான் மக்களுக்கு உண்மை விடயங்களை சொல்ல முடியும் என்பது தொடர்பாக கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. தமிழரசுக்கட்சி அதனோடு இணைந்திருக்க கூடிய பங்காளி கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைகளையும் மத்தியகுழு உறுப்பினர்கள் முன் வைத்துள்ளனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் வடக்கில் பல்லின மக்கள் வாழக்கூடிய இடங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அத்துடன் கூட்டாக எவ்வாறு இந்த தேர்தலில் மாற்றத்தினை கொண்டு வருவது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.இதேவேளை கூட்டமைப்புக்குள் ஒற்றுமை நிலைக்குமா என கேட்டபோது,

தமிழரசுக்கட்சி ஒற்றுமைக்காகவே கூடுதலான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றது. நாங்கள் ஒற்றுமையை விரும்புவதனால்தான் எங்கள் கட்சி தொடர்பாக பலர் விமர்சனத்தினை முன் வைக்கின்ற போதிலும் எங்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் போதும் தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காக நாம் கூடியளவு மௌனத்தினை வழங்கி ஒற்றுமைக்காக தியாகம் செய்துகொண்டிருக்கின்றோம். அந்த தியாகம் வீண் போகாது. ஜனநாயக தமிழரசுக்கட்சி உருவாகியுள்ளது தொடர்பாக கேட்டபோது,

இலங்கையில் எல்லோருக்கும் ஜனநாயக உரிமை இருப்பதுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் ஜனநாயகம் உச்சமானது ஆகவே அதில் உள்ள உச்சமான ஜனநாயகத்தினை பயன்படுத்தி பலபேர் இவ்வாறு கட்சிகளை தொடங்கலாம். தேர்தலில் கேட்களாம் மக்கள் விடையளிப்பார்கள்.

தொடர்டர்புடைய செய்திகள்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கி பணிநீக்கம் செய்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து
ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*