வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – இராணுவத் தளபதிக்கு யாழ்.மேல் நீதிமன்றம் அழைப்பு

யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்க ப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாட்டின் இராணுவத் தளபதியை மன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்
டுள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு செபரெம்பர் மாதம் சாவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டிவெலான கைது செய்து சென்ற நபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக் கப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தரு மாறு கோரி அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்களானது சட்டத் தரணி குருபரன் மற்றும் சுபாஷினி ஆகியோ ரால் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

இவ் மனுவில் நாவற்குழி இராணுவ முகாம் தளபதி துமிந்த கெப்டிவெலாவன முத லாம் எதிரியாகவும், இரண்டாம் எதிரியாக இராணுவ தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டு இவ் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி இவ் மனுத் தொடர்பான விசார ணையானது நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது. இதன் போதே நீதிபதி மேற்படி உத்தரவை பிறப்பி த்திருந்தார். இதன்படி நீதிபதி தனது உத்தர வில் குறிப்பிட்டிருப்பதாவது,

சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் வலிந்து காணாமல் ஆக்குதல் என்பது குற்றச் செயல் என்பதுடன் அது மனிதாபிமானத் திற்கு எதிரான செயற்பாடு எனவும் குறிப்பிட ப்பட்டுள்ளது. இவற்றைவிட ஐக்கிய நாடுகள் ரூவாண்டா யுத்தக்குற்ற நீதிமன்றமும், ஐக்கிய நாடுகள் யுஸ்கோஸ்லேவியாவின் யுத்தக் குற்ற நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் வலிந்து காணாமல்போதல் குற்றச் செயல் எனவும் மனிதாபிமானத்திற்கு எதிரான செயற்பாடு எனவும் தீர்ப்பளித்துள்ளன.
இவ்வாறான நிலையில் இவ் வழக்கும் காணப்படுகின்றது. எனவே இவ் வழக்கு தொடர்பில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முதலாம் எதிரியான துமிந்த கெப்டிவெலான மற்றும் தற்போதைய நாட்டின் இராணுவ தளபதி ஆகியோர் எதிர்வரும் ஆண்டு ஜன வரி மாதம் 18ஆம் திகதி இந் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்.

இது தொடர்பான அழைப்புக் கட்டளையை அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறும், இது தொடர்பான அறிவுறுத்தலை முதலாம், இர ண்டாம் எதிரிகளுக்கும் சட்டமா அதிபருக் கும் அனுப்பி வைக்குமாறு யாழ்.மேல் நீதி மன்ற பதிவாளருக்கு பணிப்புரை பிறப்பிப்ப தாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்