தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் வரதர் அணி இணையும்?

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் எணி எனப்படும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான அணி இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசிய்ககூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து சுரேஸ்பரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் தனித்து செயற்பட்டு வருவதுடன் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ளது.

இந் நிலையில் வரதராஜப்பெருமாள தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் உள் நுழைவதற்கான முயற்சிகளை தமிழரசுக்கட்சியுடனான பேச்சுக்களின் மூலம் செயற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுவதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் அல்லது யாப்பாணத்தில் புரிந்துணர்வொன்றினையும் ஏற்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சியும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செய்றபடக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கான முஸ்தீபுகளை ஜனநாயக பொராளிகள் கட்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்