சுற்றுலா விசாவில் வேலைவாய்ப்பு பெண் முகவர் கைது

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேதா தரங்கனி கலு ஆரச்சி என்ற இந்தப் பெண் கலேவெலையில் போலி முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். எனினும், சுற்றுலா விசாவில் இருபாலாரையும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம், சுற்றுலா விசாவில் வேலைக்கு அனுப்பியதால் தனது மனைவி வெளிநாட்டில் அநாதரவாகி இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் ஒருவர் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன் பேரில், மேதாவின் அலுவலகத்தைச் சோதனையிட்ட பணியக அதிகாரிகள், போலி முத்திரைகள் மற்றும் பலரது கடவுச் சீட்டுக்களையும் கைப்பற்றினர்.

இவருக்கு எதிராக பணியக அதிகாரிகள் தொடர்ந்த வழக்கிலேயே இன்று (22) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேதா மீது இதே குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு நீதிமன்றில் இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்