இரட்டை இலை விவகாரம்: தினகரன் தரப்பு புகார்

இரட்டை இலை தீர்ப்பு முன்கூட்டியே தரப்பட்டதா என கேள்வி எழுப்பி தினகரன் தரப்பு புகார் அளித்துள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பின் வழக்கறிஞர் மோகித் பால் புகார் அளித்துள்ளார். தீர்ப்பை தங்கள் தரப்பு வழக்கறிஞருக்கு தராதது ஏன் எனவும் தினகரன் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் தங்களது தொலைபேசி அழைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்ட்டது. ஆணையம் ஒரு தலைப்பட்சமாக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது எனவும் தினகரன் தரப்பு புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கிடைக்கும் முன் ஊடகங்களுக்கு தெரிவித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்