கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல்!

யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

ஏற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் யாழ் மாவட்டத்திலுள்ள மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெற மாவீரர் குடும்பங்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்த துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள இராச வீதியில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் அனைத்து மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள்,தமிழ்த் தேச மக்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் தமிழ் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிப்பவர்கள், ஊட நண்பர்கள், பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக வருமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் தற்போது இலங்கை இராணுவத்தின் 512வது படைத்தளமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த கல்லறைகள் இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்