தடைகளுக்கு மத்தியிலும் தொடரும் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பணி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ள நிலையில் குறித்த துயிலுமில்ல காணியில் ஒரு பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுக்காக மாவீரர் பெற்றோர் உறவுகளால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவம் குறித்த துயிலுமில்ல காணியில் உள்ள இராணுவ முகாமை சுற்றி புதிதாக காவல் நிலைகளை அமைத்து முகாமை பலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நேற்றும் இன்றும் சிரமதானப்பணிகள் இரவு ஏழு மணிவரை இடம்பெற்றுள்ளது.

எத்தகைய தடைகள் வரினும் எமது உறவுகளுக்கான நினைவேந்தல் மிக சிறப்பாக நடைபெறுமென உறவுகள் தெரிவிக்கின்றனர். அத்தோடு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் தமது உறவுகளை விதைத்தவர்கள் 27 ம் திகதி அஞ்சலி செலுத்த வருகைதருமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்