நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில் மாவீரர் நினவுநாள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நடாத்தப்பட்டுள்ளது.

மூன்று மாவீரர்களின் தாயாரான ஜெயக்குமாரி பாலேந்திரன் அவர்கள் மாவீரர்களுக்கான பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றிருந்தார்கள்.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்