முடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் […]

தமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா? சிறீதரன்

தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கடன் இணக்க திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகப் போகின்றது. எனினும், பெரும்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வழங்கக்கூடிய தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான வல்லமை அரசாங்கத்திற்கு இல்லை. ஏற்கனவே […]

மணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்

தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகரசபையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்டிற்கு சிம்மசொப்பனமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினராக இருந்த மணிவண்ணன் திகழ்ந்துவந்தார். இந்நிலையில் மணிவண்ணனின் யாழ் மாநகர உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சி […]

சிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்!

இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திடீரென்று வந்து தமிழ் மக்களுக்கு அபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமுமில்லை. இதைக் கூட மக்களுக்கு செய்யாது எதிர்வரும் மார்ச் மாதம் […]

புலிகள் ஜனநாயகவாதிகள்:சீ.வீ.கே-கொலையாளிகள்:சுமந்திரன்!

விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்களென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று காலை வியாக்கியானம் செய்ய மாலை வேளையோ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருக்கிறார். மறுபுறம் அதேவேளை தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் […]

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை […]

வடக்கு அமைச்சராக சிங்களவர் இருந்தாலும் பரவாயில்லை:சுமந்திரன்!

வடக்கு மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்,அபிவிருத்தி அமைச்சினை சிங்களவரொருவரிடம் கையளிக்கவேண்டுமென நான் கோரி வந்தேன் என தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடமிருந்து அமைச்சினை பறித்தே சிங்களவர் ஒருவரிடமேனும் அதனை கையளிக்க தான் கோரியிருந்ததாக தெரிவித்த அவர் தற்போது அது பிரதமரிடம் சென்றுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிற்கு அழைத்து பேசிய அவர் அவ்வாறான அமைச்சு பிரதமரிடம் இருக்கவேண்டுமென்ற எமது எதிர்பார்ப்பினை தற்போது நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்த அவர் பொறிமுறையொன்றின் ஊடாக அமைச்சரவையில் இணையாவிட்டாலும் தற்போது அரசில் எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் […]

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை […]

பறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணையப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள நிலையில், 101 […]

சம்பந்தனின் பதவியை பறித்தார் மகிந்த!

எதிா்கட்சி தலைவா் பதவியிலிருந்து இரா.சம்மந்தனை துாக்கி எறிந்துவிட்டு அப்பதவி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.எனினும் தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு […]

சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா?

அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச நேற்று பதவி விலகிய பின்னர், அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவும், தினேஸ் குணவர்த்தன […]

சிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்!

ரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் தமிழ்த்