கோட்டாபயவின் டெல்லி வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய வைகோ கைது!

சிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்திய தலைநகர் புதுதில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதில் அக்கட்சியின் மற்றொரு எம்பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் தில்லி காவல்துறையால் […]

கோத்தபாய ராஜபக்சேவின் டெல்லி வருகையை எதிர்த்து டெல்லியில் நவ.28-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- வைகோ

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 28-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு […]

வைகோவின் முக்கிய கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்!

இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில், விமானங்களில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் எனப் பலர் விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா […]

புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் தான் இந்த படுகொலைக்கு காரணம் என்று விடுதலைபுலிகளை சட்ட விரோதமான இயக்கம் என்றும் கூறி இந்தியா முழுவதும் தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த தடை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததால், மீண்டும் மேலும் 5 […]

இந்தியா ஒரு நாடே அல்ல! “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United States of India” என மதிமுக பொதுசெயலர் வைகோ இன்று மாலை மாநிலங்களவையில் துணிச்சலான முழக்கத்தை எழுப்பியுள்ளார். தேசிய புலனாய்வு முகவை (NIA) திருத்த சட்டம் தொடர்பில் மாநிலங்களவையில் இடம்பெற்ற வாததின்போதே அதை எதிர்த்து பேசும்போதே இவ்வாறு கூறியுள்ளார். “இது ஒரு இனம், ஒரு கலாச்சாரம், ஒரு தேசம் என அமைந்த நாடு அல்ல.., இது பல தேசிய இனங்களை, பல மொழிகளை, பல கலாச்சாரங்களை […]

வைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான்

இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால் தனக்கு மகிழ்ச்சியே என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழக தொலைக்காட்சிக்கு தேர்தல் முடிவுகளின் பின் வழங்கிய நேர்காணலில் வைகோ அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினராக பாராளுமன்றம் போனால் மகிழ்ச்சிதான், அரசியல் ரீதியாக கருத்து மாறுதல்கள் இருந்தாலும் அவர்மேல் என்றும் மரியாதை இருக்கு, அவரும் அவரின் தொண்டர்களும் தமிழக பிரச்சனைகளில் முன்னின்று போராடுறவங்கள், […]

விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை கிழித்தெறிந்த கலைஞர்?

விடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு

வன்னிக்காட்டில் இருந்த எனக்கு உயிருக்கு பயமில்லை!

உத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ ஆவேசமாக பேசினார்.

வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தொண்டர் தீக்குளிப்பு!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் உள்ள தமிழர்களை அரசு பாதுகாக்க வேண்டும் – வைகோ

கர்நாடக அரசு தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.