மாவீரர் தின எழுச்சிக்கு தயாராகின்றது தேசம்:சலசலப்புக்கள் வேண்டாம்!

மாவீரர் தினத்தை குழப்ப முற்படுகின்ற சிறுசம்பவங்களை முன்னிலைப்படுத்த வேண்டாமென பகிரங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 27ம் திகதிய மாவீரர் தினத்தைய நிகழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் தூண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னுரிமை வழங்கவேண்டாமென ஊடகங்களிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே முள்ளிவாய்க்காலில் மாவீரர் இ துயிலுமில்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட உழவு இயந்திர உரிமையாளர் இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் மாவீரர் தினம் இடம்பெறும் நிலையில், மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே […]

கோத்தபாய ராஜபக்சேவின் டெல்லி வருகையை எதிர்த்து டெல்லியில் நவ.28-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- வைகோ

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 28-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு […]

தமிழ் தேசிய தலைவர் ” மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா

” தமிழர் விடியல் கட்சி ” சார்பில் பழனி அருகே கோவை ராமகிருஷணன் தலைமையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கு ம்….. ” தமிழ் தேசிய தலைவர் ” மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா துளிகள்….

துட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்…!

ருவான் வெலிசாய…! ஒட்டுமொத்த இலங்கையின் – இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்…! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம். ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. […]

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியவில்லை – சம்பந்தன்

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக வெளியான செய்திகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். தாம் யாருக்கும் எப்போதும் அவ்வாறான அறிக்கை வெளியிடவோ, கருத்துக்களைக் கூறவோ இல்லை, இது முற்றிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்விவகாரம் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் கூறியுள்ளார். “தேர்தலில் வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெளிவான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைச்சரவையும், சிறிலங்கா அதிபரும் […]

தமிழ் மொழியை அழிக்கும் இனவாதம் தொடர்கிறது

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அண்மையில் சுதந்த மாவத்தையின் தமிழ் பெயர் பலகை இனம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாணந்துறை, கெரவலபிட்டிய பகுதிகளின் தமிழ் மொழி பெயர் பலகைகளும் அதே போல் உடைந்தெறிந்து அழிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீகந்தா உள்ளிட்டோர் நீக்கம் – கட்சியின் அதிரடி ஆரம்பம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ் மற்றும் துணை அமைப்பாளர் ஜெ.ஜனார்தன் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று (23) திருகோணமலையில் அவர்களது கட்சி அலுவலகத்தில் உப தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முக்கியஸ்தர் வினோராதலிங்கம் மற்றும் ஜனா கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலை […]

மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

மட்டக்களப்பில், படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிரமதானப் பணிகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழமை போன்று இவ்வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருகின்றன. […]

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம். இவர்கள் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கு வேண்டியவாரே செயற்பட்டனர். நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு […]

யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் இன்று (23) சனிக்கிழமை காலை எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்தக் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் குறித்த கஞ்சா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த கஞ்சா […]

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) காலை கிளிநொச்சியில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவப் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வைகோவின் முக்கிய கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்!

இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில், விமானங்களில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் எனப் பலர் விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா […]