பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்.
Author: இலக்கியன்
1000வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) 1000 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டமே இன்று 1000 நாட்களை எட்டியுள்ளது. ஏனைய பகுதி மக்களின் போராட்டங்களும் அடுத்த சில நாட்களில் 1000 நாட்களை பூர்த்தி செய்யவுள்ளன. இதேவேளை, 1000 நாட்களாக போராடும் இந்த மக்களுக்கு இதுவரை உரிய பதிலும் தீர்வும் வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளினாலும் கைவிடப்பட்ட அநாதைகள் போல் அவர்கள் போராடி வருகின்றனர். இன்னொருபுறம் […]
அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடப்பட்டுள்ள தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது! – இரா.மயூதரன்.
பௌதீக ரீதியாக ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும், உயிரிப்பறிப்பு, அங்கவீனமாக்குதல், வலிந்து காணாமல் ஆக்குதல் என்ற அடிப்படையில் ஒருபோதும் இட்டுநிரப்ப முடியாதளவிற்கு பேரழிவுகளையும், பெருந்துயரத்தையும் தந்துசென்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து மீண்டெழுவதற்கு போராடித்துடித்துக் கொண்டிருக்கும் தமிழர்களை, அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடுவதற்கான கால்கோள் விழாவாக சிறிலங்கா சனாதிபதித் தேர்தல்-2019 அமைந்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் அரசியல் தலைமைகளே ஏற்கவேண்டும். தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழர் தேசத்தின் இருப்பையும் அடிப்படையாக கொண்டு சரியான திசைவழியை காட்டாது ஆளுக்கொரு முடிவெடுத்து தத்தம்பாட்டில் […]
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி
தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன். யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய […]
கூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது!
சஜித் பிரேமதாசவை ஆதரித்து சங்கிலியன் பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமையில் மாலை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த நபர் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கடுமையான விமர்சித்துள்ளார். அவர் கூட்டத்திற்கு இடையூறாக இருக்கிறார் என பொலிசாரால் எச்சரிக்கப்பட்டார். பொலிசாருக்கும், அவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் […]
தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.
தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது. சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி […]
தேர்தலில் விலக சிவாஜி தயார்?
இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சியில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் என திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவரை தேர்தலில் இருந்து விலக கோரியுள்ளார். இதற்கு பதிலளித்து கே.சிவாஜிலிங்கம் இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து 71 […]
மாவீரர் தினத்திற்கு தடையில்லை:சஜித்
தமிழ் மக்களுடைய உறவுகளை புலிகள் என்றோ அவர்களது உறவினர்கள் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஆயுதப் போரில் உயிரிழந்த தமது சகல உறவுகளையும் அமைதியான முறையில் நினைவுகூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. அதைத் தடுப்பது மாபெரும் மனித உரிமை மீறல்.” இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் தான் இந்த படுகொலைக்கு காரணம் என்று விடுதலைபுலிகளை சட்ட விரோதமான இயக்கம் என்றும் கூறி இந்தியா முழுவதும் தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த தடை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததால், மீண்டும் மேலும் 5 […]
இன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்
அனைத்து மக்களையும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (07) காலை 11 மணிக்கு மன்னாரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், தலைமன்னார், பேசாலை, சிலாபத்துறை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வேன். புத்தளம் வீதியை மன்னாருடன் வில்பத்து காட்டுக்கு பாதிப்பின்றி இணைப்பேன். தலைமன்னாரிலிருந்து திருகோணமலை வரையிலான நான்குவழிப் பாதையை அபிவிருத்தி செய்வேன். பாலர் பாடசாலைக் கட்டமைப்பை […]
கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு
தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வீ.ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது வாகன சலுகைகளிற்காகவும் தமது சுயநலனிற்காகவும் இவ்வாறு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். தமிழ் மக்களின் நலன் […]
மதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை!
தாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை “ என் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையோடு தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரின் படத்தோடு ஒரு பிரமாண்ட விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிப்படம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாக தமிழர்கள் மகிழச் அடைந்ததோடு அதை வைத்தவரகளுக்கும் உலகமெங்கும் இருந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கான […]











