ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன்,பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலம் கருதி, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் […]

ரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, புளொட் ஆகியன ஏற்கனவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருந்த நிலையில், ரெலோவின் முடிவு குறித்து ஆராய அதன் தலைமைக்குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் நடத்தப்பட்டது. மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் சுமார் 6 மணித்தியாலங்கள் […]

எம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு

13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (07) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது, இந்நிலையில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த உங்களது நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, வேட்பாளர் ஒருவரை சுட்டுவது என்றால் நாம் இந்த 13 […]

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை வருமாறு, இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபேட்சகர்களுள் […]

போராட்டத்தில் குதித்தார் சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார். சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவர், பிரதமரின் அலுவலகமான அலரி மாளிகைக்கு முன்பாக […]

சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை! விக்கி கருத்து

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக்கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் தமது 13 அம்சக் கோரிக்கைகளை […]

டெலோவிலிருந்து முற்றாக விலகினார் சிவாஜி!

டெலோ அமைப்பிலிருந்த தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார். ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது. இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார். இதன் மூலம் தான் […]

பதவி விலகினார் சிவாஜி!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் நேரடியாக கையளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஐனாதிபதி தேர்தலில் சுயேட்சயாக போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட […]

சந்திரிகாவை வெளியேற்ற அவசரமாக மத்திய குழுவை கூட்டுகிறார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபி சிறிலங்கா இயக்கத்துக்கு தலைமை தாங்கும், சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் மத்திய குழுவின் அவசர […]

அதிபர் தேர்தல் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டோ இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிபர் தேர்தல் குறித்த இறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். யாருக்கு ஆதரவளிப்பது என்று விரைவில் அறிவிப்போம் […]

பலாலி – திருச்சி இடையே வாரத்தில் 3 விமான சேவைகள் – வரும் 10 ஆம் நாள் ஆரம்பம்

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளது. நொவம்பர் 10ஆம் நாளில் இருந்து திருச்சி- யாழ்ப்பாணம் இடையே இந்த விமான சேவை, வாரத்தில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளதாக, பிட்ஸ் எயர் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர் எக்ஸ்போ எயர் என்ற பெயரில், அழைக்கப்பட்ட இந்த நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகளையும், வெளிநாட்டு சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகளையும் நடத்தி […]

சஜித்துக்கு சந்திரிகா ஆதரவு – 28 கட்சிகளுடன் புதிய கூட்டணி உடன்பாடு கைச்சாத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 28 அரசியல் கட்சிகள், 30 பொது அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும்- புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்தப் புதிய கூட்டணியில், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தேசிய இயக்கம், ஜாதிக ஹெல உறுமய, தேசிய ஐக்கிய முன்னணி, சமசமாஜ கட்சி, உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா […]