பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பில்லை என காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த பேட்டி, மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை உண்டாக்கி இருப்பதாகவும் கூறினார். இதில் பொள்ளாச்சி ஜெயராமன் அரசியல் பின்னணி இல்லை என்று அவரே முன்வந்து தீர்க்கமாக சொன்னதால் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்தார். பொள்ளாச்சி […]
Author: இலக்கியன்
முற்றவெளிபேரணியிலும், மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள அழைப்பு
வடக்குகிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கும் மட்டக்களப்பில் எதிர்வரும் 19ம் திகதி செய்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கும் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் […]
ஐ.நா பாதுகாப்புச் சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை கோரும் பல்கலை மாணவர் போராட்டத்திற்கு பூரண ஆதரவு
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் தெரியாமலுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமது உறவினர்களைத் தேடி அலையும் மக்கள் விரக்தியின் விளிம்பிற்குச் சென்றவர்களாக கடந்த இரண்டு வருடங்களாகத் தமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவருகின்றார்கள். அவர்களது கோரிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு கருத்தில் எடுக்கவும் இல்லை எடுக்கப்வோவதும் இல்லை. ஆனால் தாம் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிய […]
யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி 2019
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழத்தின் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து அம் மாணவர்களுக்குள் இருக்கும் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக மூன்றாவது முறையாக நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2019 மிகச் சிறப்பாக யேர்மனியில் உள்ள கற்றிங்கன் நகரத்தில் 9.3.2019 சனிக்கிழமை நடைபெற்றது. யேர்மனியில் உள்ள ஐந்து மாநிலங்களில் தெரிவுப்போட்டிகள் நடைபெற்று அதில் முதலாமிடத்தைப் பெற்ற மாணவர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். போட்டிகள் பல வகையாகப் பிரிக்கப்பட்டு நிகழ்ந்தன.சங்கீதம், தாயகப்பாடல், தமிழிசை, கும்மி நடனம், காவடி, கரகம், பரதநாட்டியம், தாயகப்பாடலுக்கான எழுச்சி நடனங்கள், […]
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொண்டு அவர்களைச் சீரழித்தக் கொடூரக்கும்பல் குறித்து வெளியே வந்துக் கொண்டிருக்கும் செய்திகளும், காணொளிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கிறது. கேக்கவே குலை நடுங்க வைக்கிற வகையில் இருக்கிற இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினையும், பலத்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடங்கி பலதரப்புப் பெண்கள் இக்கும்பலால் ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள் […]
“கால நீடிப்பு வேண்டாம்” முன்னணியின் பிரேரணையும் ஆர்னோல்டால் நிராகரிப்பு!
இறுதிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு நீதி கோரிய விசாரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என்றும் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட விசேட பிரேணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என ஈபிடிபி மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏப்படுத்திய நிலையில் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே முதல்வர் ஆர்னோட்டினால் குறித்த […]
கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!
ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தபோதும் கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. சிவசக்தி ஆனந்தன், எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுச் சபையில் இருந்தபோதும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஆயினும், அவரது ரெலோ கட்சியின் மற்றொரு எம்.பியான கவீந்திரன் […]
சிங்களத்தைக் காப்பாற்ற ஜெனீவாவில் கடை விரிக்கிறது கூட்டமைப்பு
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் முதன்முறையாக இலங்கையிலிருந்து பெரும் அணியினர் சென்று கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி தரப்பு, பிரதமர் தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பிலிருந்தே இந்த அணிகள் களமிறங்குகின்றன. இது தவிர, வழக்கம்போல, முன்னாள் படையதிகாரிகளை கொண்ட, மஹிந்த சார்பு அணியும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை விவகாரங்களை இலங்கையே கவனித்துக்கொள்ளும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செய்தியுடன் அவரின் குழுவொன்று ஜெனிவா பயணிக்கின்றது. மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, […]
நாளை தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனை திறப்பு விழா
தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மக்கள் பணிமனை 10-03-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு இல 258, துர்க்கை அம்மன் வீதி, ஆனந்தபுரம் என்ற முகவரியில் திறந்துவைக்கப்படுகிறது. கட்சியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இந்த பணிமனையை திறந்துவைப்பார். கட்சியின் பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணி செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றடுக்கும் வகையில் எமது அரசியல், […]
போர்குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் ஆணையாளர் பரிந்துரை
போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகதத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது. ” இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ” என்ற தா;தலைப்பிலான இந்த அறிக்கை நேற்று கசியவிடப்பட்டது. இந்த அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் மனித உரிமைகள் சபைக்கு […]
குற்றம் செய்தவர் தண்டிக்கப்படவேண்டுமாம் -சரத்
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஏதாவது தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ”முன்னாள் கடற்படை தளபதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், தண்டிக்கப்பட வேண்டும். தமது மேல்மட்டத்தை திருப்திப்படுத்துவதற்காக, 12 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்வதற்கு உத்தரவிட்டிருந்தால், அவர் மீது சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாங்கள் […]
தமிழர்களை நோக்கி கோத்தபாய சவால்!
சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. 2010இல் மகிந்த ராஜபக்ச, தமிழர்களின் ஆதரவு இல்லாமல், 1.8 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெற்றார். 2015இல் அவர் தோல்வியடைந்தமைக்கு, தமிழ், முஸ்லிம்களின் […]












