உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுகலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்:- வன்முறைக்கு வழியை ஏற்படுத்தும் தவறான தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பினை ஒவ்வொரு பொதுமகனுக்கும் இருக்க வேண்டும். அவசரகால சட்ட நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, அனைத்து சமூகத்தினர் மற்றும் தனிநபர்களின் உரிமைகளை மதிக்கும் விதமாக தகுந்த, பாரபட்சமற்ற […]
Category: செய்திகள்
றிஷாட்க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த – பசில் எதிர்ப்பு
சிறிலங்கா அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றையதினம் சிறிலங்கா சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சிறிலங்கா எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். என்றாலும் சிறிலங்கா எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம்-தமிழீழ விடுதலைப் புலிகள்
‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு உத்தியோகபூர்வ ஏடு. இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முதல் பக்கத்தில், ‘முஸ்லிம்களால் ஒரு நெருக்கடி’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதத் தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாமல் சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர்
நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் வெடித்துள்ள கலவரங்களை அடுத்து- தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “படையினரும், காவல்துறையினரும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வடமேல் மாகாணத்தில் சில குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் சொத்துக்களை அழித்துள்ளனர். நிலைமைகளை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு […]
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை சந்திக்க நேரிடும் மகிந்த கடும் எச்சரிக்கை!
எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். தொடரும் வன்முறைகளை அடுத்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனக் கலவரங்கள் தான், நாட்டை 30 ஆண்டு காலப் போருக்குள் தள்ளியது. அந்த அனுபவங்களை நாங்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கம் தமது பொறுப்பை நிறைவேற்றாவிடினும், மக்கள், குறிப்பாக, […]
எச்சரிக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!
ஊரடங்குவேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசபயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்,சிங்களமற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல்வாதிகளும் சமயோசிதமாக காய்களை நகர்த்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகச்சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் அவர்கள்,தமிழ் மக்களின் மீது இன அழிப்புயுத்தத்தை […]
சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்!
மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இவர் கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற கலவரத்திற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு – இந்தியா அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்:- ”தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் […]
சிங்களவர்,முஸ்லீம்கள் இடையே தொடரும் முறுகல் வீடுகள் எரிப்பு!
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாக்கி இப்பொழுது நாடுமுழுவதும் வன்முறைகள் மோதல்கள் பரவிவருகிறது , நீர்கொழும்பு ,சிலாபம் ,குளியாபிட்டிய என்று தொடக்கி இன்று ஹெட்டிபொல என்ற இடத்தில தொடர்கிறது. பதற்றம் நிலவும் இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தியும் , சமூகவலைத்தளங்களை இடைநிறுத்தியும் அரசாங்கம் வன்முறைகளை கட்டுப்படுத்த முனைந்து அங்கங்கே நீடிக்கிறது. தற்போது ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீ […]
கொழும்பில் பெருமளவில் சிறிலங்கா படையினர் குவிப்பு – கவசவாகனங்களில் ரோந்து
சிறிலங்கா முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்குளி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் துருப்புக்காவி கவசவாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் ரோந்துக் காவலில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தின் சிறப்புப் படையின் உந்துருளிப் படையணியும் தீவிரமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை தொடக்கம், வாகனங்கள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன. இதனால் கொழும்பு […]
ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பலத்த சர்ச்சைகளும், சந்தேகங்களும் தோன்றியுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளார். எவ்வாறு அவருக்கு 500 மில்லியன் ரூபா பங்குகள் கிடைத்தன என்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்று […]
கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, ஒருவர் காயம்
கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு சிறிலங்கா கடற்படையினர் சைகை செய்தனர். எனினும், காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல சாரதி முற்பட்டார். இதையடுத்து, கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காரைச் செலுத்திய சாரதி படுகாயமம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார். உயிரிழந்தவர் 34 வயதுடைய நபர் […]












