இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை தெற்கில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் […]
Category: செய்திகள்
யாழ். பல்கலைக்கழக சுற்றிவளைப்பில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பாரிய சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளை அடுத்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேடுதலின் போது, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம், மற்றும் […]
வடக்கில் இராணுவ பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரவில்லை – மாவை சேனாதிராசா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து வடக்கில் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்துமாறு தான் கோரவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, வடக்கு, கிழக்கில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் தாம் கோரியதாக வெளியான செய்திகளை அவர் நிராகரித்துள்ளார். “ஐஸ்எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள, இந்த தாக்குதல்களில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதால், வடக்கு கிழக்கில் உள்ள மக்களைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதற்காக, அனைத்துலக […]
குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதி தற்கொலைக் குண்டுவெடிப்பில் உயிரிழந்தாரா என்பது தொடர்பாக, புலனாய்வு அமைப்புகள் இன்னமும் சந்தேகம் கொண்டுள்ளன. இந்த தாக்குதலுக்காக தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதிக்கு வந்தார் என்றும், ஆனால், சஹ்ரான் குண்டைவெடிக்க வைத்து தற்கொலை […]
மூக்கை நுழைத்த இந்தியா! முகநூல் எங்கும் தலைவர் படம்!
தமிழீழ தேசியத்தலைவரின் ஒளிப்படங்களை முகநூல்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முகநூல் நிர்வாகம் தொடங்கியுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முகநூல் நிர்வாகத்திடம் இந்திய ஊடகம் கருத்து கேட்ட்டபோது விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் எனவும் , இந்தியாவில் தடைசெய்தும் இருப்பதனால் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஒளிப்படங்களை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்திய அரசாங்கம் சமூக வலைதளங்களின் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனைகளை நடத்தியதாகவும் இவ்வாறான தங்கள் அரசுக்கு […]
பல்கலைக்கழக மாணவர்கள் கைதின் பின்னணியில் சுமந்திரன் !!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் கைதின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற ஐந்து மாத காலத்துள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும் அவர்களோடு ஒட்டி உறவாடி ஆதரவு அளித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிராக பாரிய அளவில் மக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். இது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் […]
இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை […]
வெளிநாட்டு புலனாய்வு எச்சரிக்கை – தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தேவாலயங்களில் நாளை மீண்டும் ஆரம்பமாகவிருந்த, ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை கத்தோலிக்கத் திருச்சபை ரத்துச் செய்துள்ளது. புதிதாக விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளை அடுத்தே கத்தோலிக்க திருச்சபையின் சிறிலங்கா பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குறைந்தது இரண்டு வழிபாட்டு இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல் ஒன்றை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் நாள் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, […]
சஹ்ரானை கொழும்பில் சந்தித்த சகோதரி மதனியா – 20 இலட்சம் ரூபா கிடைத்த வழி அம்பலம்
தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார். சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரது கணவன் நியாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மதனியாவின் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 20 இலட்சம் […]
அதிமுகவை கைப்பற்றுவாரா சசிகலா?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைப்பது சசிகலா, தினகரன் குடும்பத்தின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ் ஆதிக்கத்தை அதிமுகவில் காலி செய்து அந்த இடத்துக்கு வர விரும்புவதாகவே தெரிகிறது. உண்மையில் தினகரன் சசிகலாவுக்கு அதிமுகவில் உள்ள வாய்ப்பு என்பது என்பத மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பிறகு தெரிந்துவிடும். தேன்கூடாக இருந்த அதிமுக என்ற கட்சிக்கு ஜெயலலிதா ராணி தேனீயாக இருந்தார். அவர் இறந்த பின்னர் அதிமுக என்ற […]
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் கைவிடப்பட்டி நிலையில் இருந்த பொதி!
கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இச்சோதனை இடம்பெற்றுள்ளது.
ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளி வெடித்தது!
புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர். சுமார் ஒரு மணித்தியால தேடுதலின் பின்னர் உந்துருளி கண்டுபிடிக்கப்பட்டு வெடி வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.












