போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போர்க் குற்றத்திற்காக சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் 35 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, விசாரணைகள் தொடங்கியுள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி வழங்க […]
Category: செய்திகள்
இராணுவத்தை எதிர்த்து கிளிநொச்சியில் முன்னணி போராட்டம்!
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் விகாரை அமைத்து ஆக்கிரமித்துள்ள படையினரை வெளியேற்ற போராடிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி – சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக மே18ம் திகதி முதல் போராட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ள தமிழ் தேசய மக்கள் முன்னணியினர் பாதுகாப்பு படையினரது கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று செவ்வாய்கிழமையும் (21) போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மண்ணின் சொத்தான சந்திரன் பூங்காவை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர். பூங்காவை […]
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்த பெண்களை, இழுத்துச் சென்ற காவற்துறை!
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (12.05.24) திருகோணமலை சம்பூர் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தனக்கு எதுவுமே தெரியாதென்கிறார் கோத்தா!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை மற்றும் நீதி துறையே பொறுப்புக்கூறவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய குற்றஞ்சுமத்தியுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளுக்கு காரசாரமான மறுப்புத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கர்தினால் ரஞ்சித் பயங்கரவாதத் தாக்குதல்களில் உண்மையில் ஈடுபட்ட இரு தரப்பினரின் பொறுப்பை மறைக்கிறார் அல்லது வெளிப்படையாக அவர்களை விடுவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கர்தினால் ரஞ்சித் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வரும் குற்றச்சாட்டுகளை […]
வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரிப் போராட்டம்
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து பேரணியாக வவுனியா மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து இலுப்பையடியினை சென்றடைந்திருந்தது. இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து பேரணியாக வவுனியா சிறைச்சாலையின் முன்பாக சென்று நிறைவடைந்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி […]
யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட தொழிலாளியை காணவில்லை
யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பாத நிலையில் அவர் சென்ற படகு கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் காணாமல் போன குறித்த கடற்றொழிலாளரை தேடும் பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமைஎடுத்துவரப்படவுள்ளது!
சென்னையில் உயிரிழந்த சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கை செல்ல இந்திய மத்திய அரசு கடந்த 24ஆம் திகதி அனுமதி அளித்த நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென்று நேற்றுக் காலை மாரடைப்பு ஏற்பட்டு […]
சுமந்திரனால் முடியாது:தவராசா!
தமிழரசுக்கட்சி தலைமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவதற்கு எம்.ஏ.சுமந்திரன் முன்வந்த நிலையில், வழக்கில் சுமந்திரன் சாட்சியாக மட்டுமே முன்னிலையாகமுடியும். தவிர, தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவது சட்டத்திற்கு முரணானது என மற்றொரு கட்சி பிரமுகரும் சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். அதேவேளை ‘தமிழ் அரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்று சுமந்திரன் கூறுவது பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்’ என்றும்n கே.பி. தவராஜா தெரவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு எடுத்திருந்த தீர்மானங்களுக்கு எதிராகவும், தேசிய பேராளர் […]
கூடி முடிவெடுத்தே ரணிலுக்கு ஆதரவு?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்தி தீர்க்ககரமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் […]
2009 ஆண்டுக்கு முன்னிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவோம் – சிறீதரன்
2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை – தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும் தம் காட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஓரணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள […]
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்த சிறீதரன்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியினை ஏற்றிருந்த நிலையில் சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனிடம் (22) கொழும்பில் வைத்து ஆசீவாதம் பெற்றுள்ளார். முன்னதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஆரம்பித்திருந்தார். “ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]
இந்திய உயர்ஸ்தானிகரை கூட்டாக சந்தித்த தமிழ் தரப்பு!
இந்திய தூதரக அழைப்பினையடுத்து தமிழ் தேசிய கட்சிகள் இலங்கைக்கான இந்திய தூதுவரை கொழும்பில் இன்று திங்கட்கிழமை (22) சந்தித்துள்ளன. சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோநோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பில் தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற […]











