மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு யாழ் ஊடக அமையத்துடன் இணைந்து வடமாகாண ஊடகவியலாளர்களுக்காக நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு நேற்று (05) மாலை யாழில் இடம்பெற்றபோதே இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது ஆளுநர் அவர்கள் […]
Category: செய்திகள்
45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. நேற்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஐதேமு உறுப்பினர்களுடன் இணைந்து, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். கூட்டு எதிரணி மற்றும் ஜேவிபி உறுப்பினர்களுடன் இணைந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், வரவுசெலவுத் திட்டத்துக்கு […]
மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகரும் அரசியலமைப்பு சபை தலைவருமான கரு ஜெயசூரிய தலைமையில் நேற்றுக் கூடிய அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசியலமைப்பு சபையில் இருந்து சமல் ராஜபக்ச விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இரா.சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நேரடியாக தெரிவாகியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, இரா.சம்பந்தன் […]
கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்
ஜப்பானிய கடற்படையின் ‘Asagiri’ என்ற போர்க்கப்பல், மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 137 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில், 150 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் உள்ளனர் கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினால் ஒழுங்கு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளில் ஜப்பானிய கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர். நாளை கொழும்பு துறைமுகத்தை விட்ட இந்தக் கப்பல் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – நோர்வே அமைச்சர்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக, நோர்வே மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாங்கள் அதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். காணாமல் […]
தமிழீழ தேசத்தின் மாவீரர் விபரத்திரட்டல் இணையத்தளம்
தமிழீழ தேசத்தின் மாவீரர் விபரத்திரட்டல் இணையத்தளம் ஆனந்தபுரம் பெரும் சமரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனந்தபுரம் பெரும் சமரில் வீரகாவியமான வீரமறவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாளில் அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மாவீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களும், இதுவரை மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும், தொடர்பிழந்து இருப்பவர்களும் என வகைப்படுத்தி விபரங்களைத் திரட்டுவதற்காக www.maveerarpeddakam.com என்ற இணையத்தளத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
விக்கி ஏன் 13 ஐத் தூக்கிப்பிடிக்கிறார்
தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அன்றே நிராகரித்து விட்டிருந்த நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பிற்காக இந்தியா ஒப்பம் இட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியிருப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன். முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபில் 13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதே […]
சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை அறிவித்தது பிரித்தானியா
சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானிய தூதுவராக சாரா ஹல்டன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் அறிவித்துள்ளது. கொழும்பில் பிரித்தானியத் தூதுவராகப் பணியாற்றும் ஜேம்ஸ் டௌரிஸ், மற்றொரு இராஜதந்திர சேவைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே புதிய தூதுவராக சாரா ஹல்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவில் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார். பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தில் மனித வள பணியகத்தில் பிரதிப் பணிப்பாளராக தற்போது பணியாற்றும் சாரா ஹல்டன், முன்னதாக, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் கொரிய […]
கூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம்!
தேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும் இதே கூட்டமைப்பே காப்பாற்றியது.தற்போது அதே அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையாக நேர்மையாகச் செயற்படுவதாக இருந்தால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் தயாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வரவு செலவுத் திட்டம் […]
வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க்கல்விக்கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் மத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 31.3.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள்; […]
வேலை வாய்ப்புப் பெற்றுத்தருவதாக யாழில் பல இலட்சம் பண மோசடி
இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரே இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் மத்திய கல்லூரிக்கும் வேம்படி பெண்கள் பாடசாலைக்கும் […]
கொழும்பில் போட்டியா?-மாவை பதில்
கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். “எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று, கொழும்பு கிளை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், தமது முடிவை கட்சிக்கு அறிவிப்பதாகவும் அவர்களிடம் கூறியிருந்தேன். இந்த விடயம் தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. […]











