இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம் வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர், “ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். சிலவற்றைத் தவிர, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத சிறிலங்காவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும். […]

முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சரும் ஈழ ஆதரவாளருமாகிய ஜோர்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தனது 88வது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார். சமீப காலமாக அல்சைமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஸ் பெர்னான்டசுக்கு, சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இன்று காலை 6 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார். மூத்த தொழிற்சங்கத் தலைவரான ஜோர்ஜ் பெர்னான்டஸ், ஊடகவியலாளராக, விவசாயியாக, அரசியல்வாதியாக பன்முக ஆளுமை கொண்டவர். முன்னாள் இந்தியப் பிரதமர் […]

வடக்கில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- பென் எமர்ஷன்

இலங்கையில் விரைவாக பயங்கரவாதம் நீக்கப்பட்டு அதற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற புதிய சட்டம் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டவையாக காணப்பட வேண்டும்.மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு அவர்களின் தண்டனைகள் குறித்த பொறிமுறையொன்று அவசியம்.அதேபோன்று சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அந்தவகையில் வடக்கிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.ஆகையால் பாதுகாப்பு துறை முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம்” என ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிர்ணர் பென் எமர்ஷன் […]

யாழ் கொக்குவில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் கைதானார்

கொக்குவில் பகுதியில் தந்தை விவாகரத்து பெற்ற நிலையில், சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் தாயாருக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.சம்பவம் தொடர்பில் சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்திய போதிலும், தாயார் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தாத நிலையில் சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து அவரது தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் […]

முத்துக்குமார் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினர் உணர்வாளர்கள்!

2009இல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி தன்னுயிரை ‘தீ’ க்கு கொடுத்த மாவீரன் முத்துக்குமாரின் நினைவுநாளான இன்று அவரின் நினைவிடத்தில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் மே 17 இயக்கம் சார்பிலும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் முத்துக்குமாரின் தந்தை அமரேசன் மற்றும் அவரது தங்கை குடும்பம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

ஏ9 நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம்! போக்குவரத்துக்கள் முடங்கின!

வவுனியாவில் ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியில் அகற்றிய குப்பைகளை பிரதேச சபை துப்பரவுப் பணியாளர்கள் பம்பைமடுவில் வழமைபோன்று கொட்டுவதற்கு பம்பைமடுவில் மீட்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களால் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி குப்பை வாகனங்களை அனுமதிக்காததால் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை வவுனியா பிரதேச சபை உறுப்பினர்களும் துப்பரவுப் பணியாளர்களும் இணைந்து நத்தியுள்ளனர். இவர்களின் வீதிமறியல் போராட்டத்தினால் ஏ9 நெடுஞ்சாலைக்கு குறுக்கே குப்பைகளுடன் இருந்த உளவூர்த்திகளை சாலைக்கு குறுக்கே நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் […]

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா

அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான மாநாடு இன்று(திங்கட்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் அமெரிக்க அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக தேசிய நல்லிணக்க, […]

பிரான்சில் எழுச்சியடைந்த கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28.01.2019) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திறான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர்களின் திரு உருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை 02.04.2000 அன்று இத்தாவில் பளைப்; பகுதியில் சிறீலங்காப் படையினருடனான நேரடிமோதலி;ல் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்ரினன்ட் காண்டீபன் அவர்களின் […]

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் ஜெனீவா மாநிலத்தில் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி […]

மாலியிலுள்ள இலங்கை இராணுவம் நாடு திரும்பாது – இராணுவப் பேச்சாளர்

மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து இதுவரையில் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. மாலியின் மத்திய பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவ அணி ஒன்று கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில், இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இவ்வாறு கப்டன் தர அதிகாரி மேஜராகவும், கோப்ரல் தர அதிகாரி சார்ஜன்ட்டாகவும் நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இராணுவ அணி தாக்குதலுக்குள்ளாகிய போதிலும், […]

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் ஊடகப் பேச்சாளர், தர்மசிறி எக்கநாயக்க, “ பாதுகாப்புச் செயலரின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், இராணுவத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. சில ஊடகங்கள் அவரது கருத்தை தவறாக வெளியிட்டதால் தான், தவறான […]

விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சுற்றி வளைத்த போது, குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, அதில், விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 21 இளைஞர்களின் ஒளிப்படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த 21 சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போது, 6 […]