கேரளாவின் சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார். சபரிமலையில் பெண்கள் வழிபட இந்து அமைப்புக்கள் தொடர்ந்தும் தடை விதித்துவருகின்ற நிலையில் பலத்த முயற்சிகள் மத்தியில் இரு தமிழக பெண்கள் மலையேறி வழிபட்டிருந்தனர்.இதற்கு எதிராக இந்து அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தியதுடன் ஆலயத்தில் தீட்டு ஏற்பட்டுள்ளதாக நடைமூடி கிரியைகள் நடத்தியிருந்தனர். இந்நிலையில் குழப்பங்களுக்கு மத்தியிலும் ஈழத்தைப் பூர்வீகமாக கொண்ட சசிகலா என்ற 46 வயதான பெண் சபரிமலையின் 18 படிகளில் ஏறி, வணங்கி பாதுகாப்பாக இறங்கியுள்ளதாக […]
Category: செய்திகள்
கடற்படை முன்னாள் பேச்சாளரை கொல்ல முயன்ற அரச புலனாய்வுபிரிவு!
சிறிலங்கா கடற்படையினால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய சாட்சியை நீதிமன்றினுள் வைத்து போட்டுத்தள்ள மேற்கொண்ட முயற்சி அம்பலமாகியுள்ளது. கடற்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவின் கூட்டு நடவடிக்கையாக கடத்தல், சித்திரவதை மற்றும் சட்டவிரோத கொலைகள் ஆகியவற்றின் முக்கிய சாட்சியைத் தீர்ப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் புலனாய்வாளர்கள் இரண்டு கடற்படை உளவுத்துறை அதிகாரிகளை கைது செய்ததன் பின்னர் இவ்விவரங்களை கண்டுபிடித்துள்ளனர். டிசம்பர் 20 ம் திகதி கொழும்பு […]
போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 1-5 வரையான வகுப்பில் இருந்து 50 மாணவர்கள், 6-11 வரையான வகுப்புகளில் இருந்து 35 மாணவர்களும், உயர்தர வகுப்பில் இருந்து 15 மாணவர்களுமாக தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கும், தேவிபுரம் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த 1-5 […]
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரம்! – சீமான் அறிவிப்பு
வருகின்ற சனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் களப்பணிகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் ஊடகங்களில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற விடமாட்டோம் – மகிந்த அணி
நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். “ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது. புதிய அரசியலமைப்பு தேவையா, அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பு மாற்றத்துக்கு, மக்களின் ஆணையை அரசாங்கம் பெற வேண்டும்.” என்றும் அவர் […]
முல்லையில் கரையொதுங்கிய இந்திய படகு?
முல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய மீன்பிடி படகானது, இந்தியாவுக்குரியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்தினம் (30) முல்லைத்தீவு கடற்கரையில், சேதமடைந்த நிலையில் கரையொதுங்கிய இப்படகு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படகானது இந்தியா – ஆந்திரா மாநிலத்துக்குரிய மீனவப்படகென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த படகிலிருந்து அலைப்பேசிகள் மற்றும் மீனவத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு குறித்த படகானது, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருக்கும் வேளையில் விபத்துக்குள்ளாகியிருக்கலாமென்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு, இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புதிய வருடத்திலாவது சர்வதேசம் எம் மீது கரிசனை கொள்ளட்டும்!
புதிய வருடத்திலாவது சர்வதேச சமூகம் தம் மீது கரிசனை கொண்டு தமது உறவுகளை மீட்பதற்கு துணை நிற்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், பல நாட்களாக நாம் எமது பிள்ளைகளை காண வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் அனைவருமே எம்மை கைவிட்டு விட்டனர். எனவே நாம் தொடர்ச்சியாக சர்வதேசத்தினையே தற்போது எதிர்பார்த்து நிற்கின்றோம். எனவே […]
வவுனியாவில் ஆயுதங்களுடன் மூன்று இளைஞர்கள் கைது!
வவுனியாவில் நேற்றுமுன்தினம் இரவு ஆயுதங்களுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றபட்டதாக போலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் கோயில்குளம் 10 ம் ஒழுங்கை பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை வழி மறித்து சோதனை செய்த வவுனியா தலைமை பொலிஸ்நிலய குற்றதடுப்புபிரிவினர் முச்சக்கரவண்டியில் வாள், கத்திகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து […]
மகிந்தவை பதம் பார்க்க திட்டமிடும் சந்திரிகா?
அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இறங்கியுள்ளார் என்று மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது. அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டு எதிரணி எம்.பியான செஹான் சேமசிங்க மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” சுதந்திரக்கட்சியிலுள்ள எம்.பிக்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இக்குழுவை சந்திரிக்காவே வழிநடத்துகின்றார். இதற்கான தேவைப்பாடு என்னவென்பது புரியவில்லை. இருந்தாலும் அவர் சூழ்ச்சி செய்கிறார் என்பது தெளிவாகின்றது. கடந்தகாலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் ஆரம்பம் […]
முறிகண்டியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு!
முறிகண்டிப் பகுதியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன. ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குறித்த கால்நடைகளை மேய்ச்சலிற்காக திறந்து விட்ட நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த கால்நடைகள் மோதியதால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருவாரூரில் சாதிக்க காத்திருக்கும் தினகரன்!
திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் பாணியில், திமுக, அதிமுகவிற்கு டிடிவி தினகரன் ஷாக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து, திமுக மீண்டும் அந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுவதை போலவே, ஆர்.கே.நகரில், டிடிவி தினகரன் வெற்றி பெற்றது போல, இந்த தொகுதியிலும் அம்மா […]
புத்தாண்டில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும்: வாசுதேவ
2019 ஆம் ஆண்டில் அரசாங்கம் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் எதிர்ப்பார்க்கும் சலுகைகளை இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுள்ளது. நாளுக்கு நாள் நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அடுத்த வருடம் என்பது தேர்தல்களுக்குத் தயாராகும் ஒரு வருடமாகவே இருக்கிறது. மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், […]












